fbpx

புதிதாக ஆதார் கார்டு பெறுவோரின் கவனத்திற்கு..!! வந்தது புதிய மாற்றம்..!! இனி இதுதான் ரூல்ஸ்..!!

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதல் முறையாக ஆதார் கார்டு பெறுவோருக்கு பாஸ்போர்ட்டுக்கு இணையான நடைமுறையை இந்திய தனித்துவ அடையாள அதிகார அமைப்பு (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முதல் முறையாக ஆதார் பெற விரும்புவோருக்கு இனி, மாநில அரசின் கண்காணிப்பு அலுவலர் நேரடி சரிபார்ப்பு செய்து ஒப்புதல் அளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “18 வயதுக்குப் பிறகு முதல் முறையாக ஆதார் பெற விரும்புவோருக்கு பாஸ்போர்ட் போன்ற சரிபார்ப்பு நடைமுறை இருக்கும். இந்த நடைமுறைக்காக ஒப்புதல் அலுவலர்கள் அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகள், மாவட்ட மற்றும் சார் கோட்ட அளவில் அலுவலர்களை மாநில அரசு நியமிக்கும்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் முறையாக ஆதார் பெறுவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதான தபால் நிலையங்கள், யுஐடிஏஐ-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களை அணுகலாம். ஆதார் கோரி விண்ணப்பித்தால் அனைத்து தரவுகளும் பெறப்பட்டு, சேவை இணையதளம் மூலம் சரிபார்ப்புக்கு அனுப்பப்படும். சேவை இணையதளத்தில் பெறப்படும் அனைத்து தகவல்களையும் சார் கோட்டாட்சியர்கள் சரிபார்த்து உறுதி செய்வார்கள். சேவை இணையதளத்தில் தரவுகள் பெறப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 180 நாள்களுக்குள் ஆதார் வழங்கப்படும். இந்த நடைமுறையானது பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு இணையான நடைமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

வைகுண்ட ஏகாதசி..!! திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்..!!

Thu Dec 21 , 2023
மார்கழி மாதத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி வரும் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும். இந்த 10 நாட்களிலும் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இதனைக்கான ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவர். இதற்காக ஏற்கனவே ரூ. 300 சிறப்பு தரிசனம் மற்றும் வாணி அறக்கட்டளை […]

You May Like