பொதுவாக, பல பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது feeding braக்கு பதில், தினமும் போடும் ப்ராவை அணிந்து, குழந்தைக்கு பாலூட்டுகிறார்கள். feeding bra வாங்குவது வெறும் பண விரயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு சிந்தனை பயனுள்ளதாக இருக்கும். அதாவது உங்கள் மார்பகங்கள் பெரிதாக இருக்கும். இந்நிலையில் சிறிய அளவிலான பழைய பிராவை நீண்ட நேரம் அணிவது ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஏனென்றால் அது மிகவும் இறுக்கமாக உணர்கிறது. எனவே இந்த சமயத்தில் feeding bra பயன்படுத்துவது நல்லது.
புதிதாகப் பிறந்த குழந்தை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் பால் குடிக்க விரும்புவது இயல்பானது. இதனாலேயே பல பெண்கள் ப்ரா போட விரும்புவதில்லை. ஆனால் பெண்கள் ப்ரா அணியாமல் இருந்தால், மார்பகங்கள் தொங்க வாய்ப்பு அதிகம். மேலும் இதனால் முதுகு வலியும் கூட வரும். எனவே, பிரா கண்டிப்பாக போட வேண்டும். குழந்தை பெற்ற பிறகு பாலூட்டும் தாய்க்கு உடல் சுத்தம் மிகவும் முக்கியம். எனவே ஒரே பிராவை நீண்ட நேரம் அணிந்து அதை மாற்றாமல் இருப்பதினால் மார்பக தொற்று, பாக்டீரியா வளர்ச்சி மற்றும் நிப்பிள் பகுதியில் துர்நாற்றம் ஏற்படும். எனவே, கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது ப்ராவை மாற்ற வேண்டும்.
பாலூட்டும் தாய்மார்கள் இதை அவசியம் பின்பற்ற வேண்டும். அதனால்தான் feeding bra போடுமாறு மகளிர் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுபோல் பிராவை ரொம்பவும் இறுக்கமாக போடாமல் இருப்பது நல்லது. மேலும் பெரிய சைஸ் பிரா போட்டால் அங்கு எரிச்சல் அதிகரிக்கும். நிச்சயமாக, பிராவில் பல்வேறு மெட்டீரியல்கள் உள்ளன. ஆனால் பாலூட்டும் பெண்கள் காட்டன் மெட்டீரியலால் செய்யப்பட்ட பிராவை அணிய வேண்டும். இதனால் உடல் வெப்பநிலை சீராகி எரிச்சல் நீங்கும்.