சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று (மே 18), நாளை (மே 19) தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரம், கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் என பல்வேறு பகுதிகளுக்கு இந்த புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.இந்த நிலையில், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் மே 18,19 தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாகக் கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 15 ரயில்கள், மே 18, 19 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் 8 ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது.
Read More: ‘X குரோமோசோமில் உள்ள மரபணு ஆண்களின் கருவுறுதலில் பங்கு வகிக்கிறது’ – ஆய்வில் தகவல்!