fbpx

பயணிகள் கவனத்திற்கு..!! ரயில்களில் இனி சார்ஜ் போட தடை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு வசதிகள் அதிகம் என்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கின்றனர். இதனால், இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வருவதோடு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில், மொபைல் மற்றும் லேப்டாப் போன்றவற்றை ரயிலில் சார்ஜ் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் செல்போன் மற்றும் லேப்டாப் பயன்படுத்தும் நிலையில், ரயிலில் ஜார்ஜ் போட்டுவிட்டு சுவிட்சை அணைக்காமல் விட்டு விடுகின்றனர்.

இதனால், ஷார்ட் சர்க்யூட் ஆகி தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கடந்த 2014ஆம் ஆண்டு ரயில்வே வாரியம் பிறப்பித்தது. அதன் பிறகு கடந்த 2021இல் அனைத்து துறைகளுக்கும் இது போன்ற உத்தரவை ரயில்வே வாரியம் பிறப்பித்தது. இருப்பினும் இந்த உத்தரவு ரயில் பயணிகளிடையே சரிவர சென்றடையவில்லை. மேலும் ரயிலில் பயணம் செய்யும்போது இந்திய ரயில்வே நிர்வாகத்தின் விதிமுறைகளை தெரிந்து வைத்திருப்பது மிக மிக நல்லது ஆகும்.

Chella

Next Post

71,000 பேருக்கு பணி நியமன ஆணை.. வரும் 13-ம் தேதி பிரதமர் மோடிவழங்குகிறார்..

Tue Apr 11 , 2023
புதிதாக அரசு பணிகளில் சேர உள்ள 71,000 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி பணி நியமன ஆணையை வழங்க உள்ளார். படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தங்களின் தகுதிக்கு ஏற்ப அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கும் நோக்கில் மத்திய அரசு ரோசர் மேளா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரோசர் மேளா திட்டத்தின் கீழ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை […]
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..! முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு..!

You May Like