fbpx

லிவ்-இன் உறவில் உள்ளவர்கள் பிரிந்தால்!… நீதிமன்றம் வைத்த செக்!

live-in relationship: லிவ்-இன் உறவில் உள்ள தம்பதிகள் பிரிந்தால் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தரவேண்டும் என்று மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு உறவைத் தொடங்குவது மிகவும் எளிதானது. ஆனால் அதை உண்மையான இதயத்துடன் பராமரிப்பது மிகவும் கடினம். அதே நேரத்தில், உறவை வலுப்படுத்த, தம்பதிகள் பெரும்பாலும் ஒன்றாக வாழத் தொடங்குகிறார்கள். இது ‘லிவ்-இன்’ உறவு என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இது சட்டப்பூர்வமானது, ஆனால் இந்தச் சட்டத்தில் ஆண் மற்றும் பெண் வயதும் குறிப்பிடப்பட்டுள்ளது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்வது எளிதல்ல. ஆனால் நீங்கள் பல வகையான மகிழ்ச்சிகளைப் பெறுவீர்கள். ஆனால் நீங்கள் பல விஷயங்களில் சமரசம் செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து செல்லும் நிலையும் வரும்.

அந்தவகையில், லிவ் இன்’ எனப்படும் சேர்ந்து வாழும் உறவு முறையில் தம்பதி பிரிந்தாலும், பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சில பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்தனர். இதில் அந்தப் பெண், பராமரிப்பு செலவு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு மாதம் 1,500 ரூபாய் பராமரிப்பு செலவு தர வேண்டும் என்று, அவரது துணைக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அந்த ஆண், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில், தற்போதைய நவீன வாழ்க்கையில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும், லிவ் இன் என்பது சகஜமாகிவிட்டது. இது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவும் மாறிவிட்டது. இந்த தம்பதி, நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உறவில் குழந்தையும் பிறந்துள்ளது. சட்டப்பூர்வமாக திருமணம் செய்யாவிட்டாலும், அந்த பெண்ணுக்கு, அந்த ஆண், ஜீவனாம்சம் எனப்படும் பராமரிப்பு செலவு வழங்க வேண்டும்.

Readmore:என்கவுண்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!… பாதுகாப்பு படையினர் அதிரடி!

Kokila

Next Post

முக்கிய அறிவிப்பு...! கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்...!

Sun Apr 7 , 2024
கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2023 – 24 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த மொத்த வேலை நாட்களுக்கு குறையாமல் உள்ளது என்பதை கல்லூரி முதல்வர்களே உறுதி செய்து கொண்டு கல்லூரி இறுதி பணி நாளை நிர்ணயித்து கொள்ளலாம். அந்தவகையில், கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 19 ஆம் […]

You May Like