fbpx

சென்னை மக்கள் கவனத்திற்கு.. இன்று இந்த சாலைகளில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை..

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.. பிரதமர் மோடி இந்த விழாவை தொடங்கி வைக்கிறார்.. பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 44-வது செஸ் ஒலிம்பியாட் விழா சென்னை பெரியமேடு ராஜா முத்தையா சாலையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெறுகிறது.. இதில் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்..

எனவே சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.. இன்று நண்பகல் முதல் இரவு 9 மணி வரை ராஜா முத்தையா சாலை, ஈவெரா சாலை, மத்திய சதுக்கம், அண்ணாசாலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது..

மேலும் தேவை ஏற்படின், வாகனங்கள் டிஎம்.எஸ் சாலை சந்திப்பில் இருந்து ராஜா முத்தையா சாலை வரை அனுமதிக்கப்படமட்டாது.. அதே போல் ஈவெகி சம்பத் சாலை, ஜெர்மயா சாலை சந்திப்பில் இருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.. வணிக நோக்கிலான வாகனங்கள், ஈ.வெ.ரா சாலை கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, இர்வின் சந்திப்பிலிருந்து செண்ட்ரல் நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது..

அது போல் பிராட்வேயில் இருந்து வரும் வணிக நோக்கிலான வாகனங்கள், குறளகம், தங்க சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கி திருப்பிவிடப்படப்படும்.. இந்த வாகனங்கள் வியாசர்பாடி, மேம்பாலம் வழியாக சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம்.. மத்திய ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய பொதுமக்கள், தங்கள் பயணத்திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. எனவே வாகன ஓட்டிகள் மேற்கொண்ட சாலை வழித்தடங்களை தவிர்த்து பிற வழித்தடங்களை பயன்படுத்த கேட்டுக்க்கொள்ளப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

நாடு முழுவதும் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் இணைப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல்...!

Thu Jul 28 , 2022
4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்க முடியும். மேலும் 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்பட உள்ளது. […]

You May Like