fbpx

சென்னை மக்கள் கவனத்திற்கு..!! இந்த நம்பரை நோட் பண்ணி வச்சிக்கோங்க..!! உடனே கால் பண்ணுங்க..!!

தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதியான பொன்னேரி, திருப்போரூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், குன்றத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, கிண்டி, மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் சென்னையில் மையப்பகுதிகளான ஆலந்தூர், அமைந்தக்கரை, அயனாவரம், மாம்பலம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் கனமழையால் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகளை தெரிவிக்க 1913 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் 9445 47205 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், 044-2561 9206, 2561 9207, 2561 9208 அது எண்ணில் நேரடியாக மாநகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சமூக வலைதளங்களில் #ChennaiCorporation #ChennaiRains ஆகிய ஹேஸ்டேக்குகளில் புகார் தெரிவிக்கலாம்.

Chella

Next Post

கேண்டீன்களுக்கு பறந்த உத்தரவு..!! இனி இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை..!!

Tue Nov 14 , 2023
அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் எலி உணவுகளை திண்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உணவு பாதுகாப்புதுறை சார்பில் தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் இருக்க கூடிய அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் வட்டார மருத்துவமனைகளில் இருக்க கூடிய கேண்டீன்களில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. * கேண்டீன்கள் தொடர்ந்து முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் […]

You May Like