fbpx

மக்களே எச்சரிக்கை!… வீட்டில் தங்கத்தை வைத்திருக்க விதிமுறைகள்!… வருமான வரித்துறையின் வரம்பு என்ன?

வீட்டில் எவ்வளவு தங்கம் அல்லது தங்க நகைகள் போன்றவற்றை வீட்டில் வைத்திருக்கலாம் என்ற வருமான வரித்துறையின் வரம்புகள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

பெண்களின் உயரிய குணத்தை, தங்கத்தோடு ஒப்பிட்டு, “பத்தரை மாற்று பெண்’ என கூறியதாலோ என்னவோ, பெண்களையும் தங்கத்தையும் பிரிக்க முடியவில்லை. அழகுப் பெண்ணைக் கூட, “தங்கம்’ போல ஜொலிக்கிறாள் என்று வர்ணிக்கிறோம். இன்னும் ஒரு படி மேலே போனால், குழந்தைகளை சாப்பிட வைக்கும் போது, “என் தங்கம்… என் வைரம்…’ என “விலை மதிப்பில்லாமல்’ கொஞ்சி சாப்பிட வைக்கிறோம். நாம் இவ்வளவு முக்கியத்துவம் ஏழை, எளியோருக்கு எட்டாத பொருளாய், விலையில் வானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது தங்கம். தங்கம் அணிவதன் மீதான பெண்களின் மோகம் தீரும் வரை, தங்கம் தனது விலையிலிருந்து குறையாது. இந்தநிலையில், ஒரு அளவுக்கு மேல் தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியாது. தங்கத்தை வீட்டில் வைத்திருக்க அரசின் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வீட்டில் எவ்வளவு தங்கம் அல்லது தங்க நகைகள் போன்றவற்றை வீட்டில் வைத்திருக்கலாம் என்ற விதி உள்ளது. அதற்கான வரம்புகள் வருமான வரித்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் வைத்திருக்கும் தங்கத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்யாமல் இருக்க வேண்டுமானால், அதன் வரம்பு தெரிய வேண்டும். பெண்கள் வீட்டில் எவ்வளவு தங்க நகைகளை வைத்திருக்கலாம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முந்தைய தங்கக் கட்டுப்பாடு சட்டம் 1968 இந்தியாவில் பொருந்தும். இதன்படி, குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் தங்கம் வைத்திருக்க மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்தச் சட்டம் ஜூன் 1990ல் ரத்து செய்யப்பட்டது.அதன்பின் தங்கம் வைத்திருப்பதற்கான வரம்பு குறித்து அரசு எந்த விதியையும் உருவாக்கவில்லை. ஒரு பெண் அல்லது நபர் தங்களிடம் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதற்கு சட்ட வரம்பு இல்லை. 1994 ஆம் ஆண்டில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தங்கம் தொடர்பாக சில வழிமுறைகளை வெளியிட்டது. திருமணமான பெண் 500 கிராம் எடையுள்ள தங்க நகைகளைன் வைத்திருக்கலாம், அதை வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய மாட்டார்கள். திருமணமாகாத பெண் 250 கிராம் வரையிலான தங்க நகைகளைப் வைத்திருக்கலாம். அது பறிமுதல் செய்யப்படாது.

திருமணமான அல்லது திருமணமாகாத ஆண் வைத்திருக்கும்100 கிராம் வரையிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்படாது. இருப்பினும், வருமான ஆதாரம் இல்லாமல் அதிக தங்கம் பிடிபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் தங்கத்தை பரிசாகவோ அல்லது பரம்பரையாகவோ பெற்றிருந்தால், அதற்கான ஆவணத்தை நீங்கள் காட்ட வேண்டும். வருமான வரிக் கணக்கிலும் இதை குறிப்பிட வேண்டும். ஒரு ஆவணமாக, தங்கத்தைப் பரிசளித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ரசீதைக் காட்டலாம். அதே போல், யாரேனும் ஒருவர் தங்கத்தை மூன்றாண்டுகளுக்கு மேல் வைத்திருந்து விற்பனை செய்தால், நீண்ட கால மூலதன ஆதாய வரி (LDCG) விற்பனை வருவாயில் விதிக்கப்படும். மேலும், நீங்கள் தங்கத்தை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால், அதன் மூலம் கிடைக்கும் லாபம் தனிநபரின் வருமானத்துடன் சேர்க்கப்படும். அதோடு, அதன் மீது பொருந்தக்கூடிய வரி அடுக்கின் படி வரி விதிக்கப்படும்.

தங்க முதலீட்டு பத்திரங்கள் (SGB) விற்பனை செய்யப்பட்டால், அதன் மூலம் கிடைக்கும் லாபம் உங்கள் வருமானத்தில் சேர்க்கப்பட்டு, உங்களுக்கு பொருந்தக் கூடிய வரி அடுக்குக்கு ஏற்ப வரி விதிக்கப்படும். மூன்று வருடங்கள் வைத்திருக்கும் தங்க முதலீட்டு பத்திரங்கள் விற்கப்படும் போது 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படும். நீங்கள் முதிர்வு காலம் முடிந்த பிறகு தங்கப் பத்திரங்களை விற்றால் அதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி இல்லை.

Kokila

Next Post

மது பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டிங்களா?... இந்த 5 வழிமுறைகளை பின்பற்றுங்கள்!

Mon Jul 10 , 2023
மது பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இன்றைய காலத்தில் குடிப்பழக்கம் நம் கலாசாரத்தோடு இணைந்த ஒரு செயலாகிவிட்டது. கெடாவெட்டு, கோயில் திருவிழா, கல்யாணம்… என எந்தக் கொண்டாட்டமாக இருந்தாலும், ஏன்… மரணம் நிகழ்ந்த வீடாக இருந்தாலும்கூட குடி என்பது தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டது. சாலையோர டாஸ்மாக் கடைகளை உச்ச நீதிமன்றம் அகற்றச் சொன்னாலும், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து […]

You May Like