fbpx

மக்களே கவனம்..!! வாட்டி வதைக்கும் வெயில்..!! வெப்ப அலை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!!

குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாச்சல், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்தியாவில் வழக்கமாக மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெயில் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, கோவா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வழக்கத்தைவிட 5 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக 31.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த மாநிலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். பொதுவாக மார்ச் மாதத்துக்குப் பிறகுதான் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால், தற்போது முதல்முறையாக பிப்ரவரியில் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. ஞாயிற்றுக் கிழமையன்று, குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 9 டிகிரி அதிகமாகும். அதேபோல் நலியா பகுதியில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. ராஜ்கோட்டில் 39.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அகமதாபாத்தில் 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மும்பையில் 36.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கோவாவில் 32.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குருகிராமில் 31.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. சிம்லாவில் 23.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச சராசரி வெப்பநிலையை நாடு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

நடிகர் மயில்சாமியின் உடல் தகனம்..….! கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பம்…..!

Mon Feb 20 , 2023
மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணீருடன் அவருக்கு விடை கொடுத்து அனுப்பினர். நடிகர் மயில்சாமி நேற்று உடல் நல குறைவு காரணமாக, திடீரென்று மரணம் அடைந்தார். இந்த நிகழ்வு திரையுலகை சார்ந்த நட்சத்திரங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மயில்சாமியின் உடலுக்கு திரை உலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அவர் இவ்வளவு விரைவில் கூடாது என்று தெரிவித்து கண்ணீர் விட்டு […]

You May Like