fbpx

கர்ப்பிணிகள் கவனத்திற்கு!… பிறப்பு குறைபாடுகளை தவிர்க்க!… வழிமுறைகள் இதோ!

குழந்தைக்கு பிறப்பு குறைபாடு வராமல் இருக்க கர்ப்பிணிகள் செய்யவேண்டியவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

குழந்தை உடல் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை பிறப்பு குறைபாடுகள் என்கிறார்கள். இதில் பல வகைகள் உள்ளன. பிறவியிலேயே குழந்தைகள் குறையுடன் பிறப்பதை தடுக்க முடியாது என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் அதை குறைக்க முடியும் என சொல்லப்படுகிறது. மரபணு மாற்றங்கள், இதய பிரச்சனைகள், அன்ன பிளவு ஆகியவை பிறப்பு குறைபாடுகளில் சில நோய்களாகும். பிறப்பு குறைபாடுகளை தவிர்க்க ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு உதவுகிறது. இது அத்தியாவசியமான பி வைட்டமினாகும். ஒருவேளை கர்ப்பிணிக்கு ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், நரம்பு குழாய் குறைபாடுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஃபோலிக் அமில குறைபாட்டை தவிர்க்கும் வழிகளை இங்கு காணலாம்.

கர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் உடலில் ஃபோலேட் தேவையான அளவு இருந்தால் தான், பிறப்பு குறைபாட்டை 70% தடுக்க முடியும் என சொல்லப்படுகிறது. சாதாரணமாக ஃபோலிக் அமிலம் ஒருநாளுக்கு 400மைக்ரோ கிராம் பரிந்துரைக்கப்படுகிறது. இதுவே கருத்தரித்துள்ள பெண்களுக்கு 800மைக்ரோகிராம் தேவை. நாள்தோறும் 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலம் பெற பச்சை காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி உண்ணலாம். மேலும் மருத்துவர் பரிந்துரையின் படி சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் அயோடின் குறைபாடு ஏற்படக் கூடாது. கர்ப்பிணிகளுக்கு அயோடின் தேவை அதிகமாக இருக்கும். அயோடின் குறைபாடு ஏற்படுவது நரம்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அது மட்டுமின்றி கரு இறப்பு, கிரெட்டினிசம் போன்ற ஆபத்தான பிரச்சினைகளுக்கு வாய்ப்பாக அமையும். இவை பிறவி குறைபாடு ஆகும். இப்படி நிலை வந்தால் பிறக்கும் குழந்தைக்கு மனம், உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால் கருத்தரிக்கும் முன்பும், கர்ப்ப காலத்திலும் கர்ப்பிணிகளுக்கு பொட்டாசியம் அயோடைடு நாள்தோறும் 150 மைக்ரோகிராம் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

கருத்தரிக்க திட்டமிடும் முன்பாக உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதிகபட்சம் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ அளவுகள் கர்ப்ப காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக வேண்டும். உடல் மட்டுமின்றி மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். என்னென்ன வைட்டமின்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும், என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பது குறித்து மருத்துவரிடம் கலந்தாலும் செய்யுங்கள். குறிப்பாக நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு ஆகிய கர்ப்பகால குறைபாடுகளை தவிர்க்க மருத்துவர் உதவியை நாடுங்கள்.

கருவுறுதலை எதிர்பார்க்கும் பெண் தவிர்க்க வேண்டியவை: கருத்தரிக்க ஆவலாக இருக்கும் பெண்கள் புகையிலை, மது போன்ற தீங்கு செய்யும் பழக்கங்களை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஆல்கஹால் எடுத்துக் கொள்வது பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உடல் உழைப்பை பழக்கப்படுத்தாமல் ஒரே இடத்தில் அமர்வது போதுமான உடற்பயிற்சி இல்லாதது மோசமான உணவு முறை தூக்கத்தை தவிர்ப்பது ஆகிய பழக்கங்கள் கருத்தரிதழில் பிரச்சனை ஏற்படுத்தலாம்.

Kokila

Next Post

பிரதமர்‌ நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்ட புனித செங்கோல்...!

Sun May 28 , 2023
ஆதீனங்கள் முன்னிலையில்‌ புனித செங்கோலை மதுரையின்‌ 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள்‌ பிரதமர்‌ நரேந்திர மோடியிடம்‌ வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தின்‌ புதிய கட்டிடம்‌ இன்று பிரதமர்‌ நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார்‌. இந்நிலையில்‌, டெல்லி சென்ற 21 ஆதீன சுவாமிகள்‌ அமைச்சர்கள்‌ மற்றும்‌ மற்ற ஆதீனங்கள் முன்னிலையில்‌ புனித செங்கோலை மதுரையின்‌ 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள்‌ பிரதமர்‌நரேந்திர மோடியிடம்‌ நேற்று வழங்கினார்‌. நாடாளுமன்றத்தின்‌ புதிய கட்டடம்‌ இன்று […]

You May Like