தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அரசின் நிதியுதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு சென்றடைகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் விடுமுறையின்றி இயங்கி வந்தன. அனைத்து நாட்களிலும், அனைத்து அட்டைதாரர்களுக்கும், அனைத்து பொருட்களையும் வழங்க உணவுத்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், இதனை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 13, 25 ஆகிய தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை (நவ.25) நியாய விலைக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.