fbpx

ரூ.2,000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய தகவல்!

ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி கடந்த 19ம் தேதி அறிவித்தது. ரூ.2,000 நோட்டுகளை நாளை முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

அதன்படி ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு போதுமான குடிநீர், உரிய இடவசதி உள்ளிட்டவற்றை வங்கிகள் செய்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலு்ம தினமும் எவ்வளவு ரூ.2,000 நோட்டுகள் மாற்றப்படுகின்றன என்பது குறித்த தகவல்களை முறையாக சேகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகள் பெரிய அளவில் மக்களிடம் புழக்கத்தில் இல்லாததால், இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பானது தங்களது அன்றாட வாழ்வினை பெரிதளவில் பாதிக்கவில்லை என பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Baskar

Next Post

திமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது ஆளுநரிடம் புகார்…..! சென்னையில் அதிமுக பேரணியால் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து….!

Mon May 22 , 2023
திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து விட்டதாகவும் எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து ஒட்டுமொத்தமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே திமுக ஆட்சி குறித்து ஆளுநரிடம் புகார் வழங்கப்படும் என்று அதிமுக தலைமை சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, இன்று அந்த கட்சியின் […]

You May Like