ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், கேரள மோட்டார் வாகனத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சபரிமலை தரிசனத்துக்கு வரும் ஐயப்ப பக்தர்கள், பொதுப் போக்குவரத்தையும், வாடகை மற்றும் சொந்த வாகனங்களையும் பயன்படுத்த வேண்டும். சபரிமலைக்கு ஆட்டோ அல்லது சரக்கு வாகனங்களில் செல்ல வேண்டாம். அதேபோல், மோட்டார் சைக்கிள்களும் பம்பை நோக்கி செல்லக்கூடாது. இதுபோன்ற பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். தூக்கம் இல்லாமல் அல்லது சோர்வாக பயணம் செய்வது ஆபத்தானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.