fbpx

சிறுசேமிப்பு திட்ட முதலீட்டாளர்கள் கவனத்திற்கு.. இந்த தேதிக்குள் ஆதாரை இணைக்கவில்லை எனில் பணம் கிடைக்காது..

ஆதார் என்பது தற்போது அத்தியாவசிய ஆவணமாக மாறிவிட்டது.. ஆதாருடன் அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைக்க அரசு வலியுறுத்தி வருகிறது.. வங்கிக்கணக்கு, பான் எண், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை என அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் PPF, NSC மற்றும் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஏப்ரல் 1, 2023 முதல் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுது.

எனவே SCSS, PPF, NSC அல்லது பிற திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் தங்கள் ஆதாரைச் சமர்ப்பிக்க வேண்டும். வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் உங்கள் ஆதார் எண்ணை அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது உங்கள் வங்கிக் கிளையிலோ கொடுத்துவிட்டீர்கள் என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்தக் காலக்கெடுவிற்குள் ஆதார் எண் சமர்ப்பிக்கப்படாவிட்டால் உங்களின் சிறுசேமிப்புப் பங்களிப்புகள் முடக்கப்படும். சிறு சேமிப்பு திட்டங்களில் பங்கேற்பதற்கு ஆதார் அவசியம் என்று நிதி அமைச்சகம் அறிவித்ததே இதற்குக் காரணம். கடந்த மார்ச் 31, 2023 மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சிறு சேமிப்பு திட்டத்துடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது..

6 மாதங்களுக்குள் அல்லது செப்டம்பர் 30, 2023க்குள் ஆதார் எண்ணை தபால் நிலையத்திலோ அல்லது வங்கிக் கிளையிலோ வழங்காவிட்டால் சிறுசேமிப்பு முதலீடு முடக்கப்படும்.

தபால் நிலையத்தில் முதலீடுகள் முடக்கப்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும்..?

  • வட்டி டெபாசிட் செய்யப்படாது
  • உங்களால் உங்கள் PPF அல்லது சுகன்யா சம்ரித்தி கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்ய முடியாது
  • முதிர்வுத் தொகை உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படாது

Maha

Next Post

கொரோனா அதிகரிப்பு.. அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அட்வைஸ்..

Fri Apr 7 , 2023
கொரோனா அதிகரிப்பு குறித்து விழிப்புடன் இருக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா அறிவுறுத்தி உள்ளார்.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 6000-ஐ தாண்டியது… ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, […]
BF.7 கொரோனா ஒருவரிடம் இருந்து இத்தனை பேருக்கு பரவுமா..? அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்ட மருத்துவர்கள்..!!

You May Like