டிப்ளமோ முடித்தவர்கள் B.E., B.Tech., படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது..
பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பித்தற்கான கால அவகாசம் 19.07.2022. என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பதற்கான கால அவகாசம் 07.07.2022 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவராத நிலையில் அம்முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்கள் வரை அவர்களும் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.. அதன்படி விண்ணப்பங்களை சமர்ப்பிக் ஜூலை 27 வரை கால அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது..
இந்நிலையில் டிப்ளமோ முடித்தவர்கள் B.E., B.Tech., படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.. அதன்படி, B.E., B.Tech., படிப்புகளில் 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு வரும் ஆக.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இன்றுடன் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், டிப்ளமோ மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது..