தமிழகத்தில் 6முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
2023ஆம் கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் மாத 2வது வாரத்தில் தொடங்கி செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுவாக 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளில் பள்ளி அளவில் ஆசிரியர்கள் அல்லது மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் விநியோகம் செய்யப்படும், இந்த நடைமுறை காலாண்டு மாற்று அரையாண்டு தேர்வுகளில் கடைபிடிக்கப்படும்.
இந்நிலையில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் விநியோகம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாநில கல்விவியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த பொது வினாத்தாளை வடிவமைத்து காலாண்டு தேர்வுக்கு பயன்படுத்த உள்ளதாகவும், அதன்மூலம் மாணவர்களின் கற்றல் திறனை வெளிக்கொண்டு வர முடியும் என்று தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இந்த பொது வினாத்தாள் முறை சோதனை அடிப்படியில் 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.