தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு சான்றிதழ் உயர்கல்வி பயில மிக முக்கியமான ஆவணமாக இருந்து வருவதனால், அந்த மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் அந்த பிழையை மாற்றம் செய்து கொள்ள தேர்வுத்துறை இயக்குனரகம் வாய்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, பிழை இருந்தால் மாணவர்கள் திருத்தம் செய்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு சான்றிதழில் பிழை இருக்கும் மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்றிதழை தலைமை ஆசிரியர் மூலம் செப். 8-ம் தேதிக்குள் மாவட்ட தேர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திருத்தங்கள் கோரி வரும் அசல் மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக உதவி இயக்குநர்கள் செப். 22-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், தனித்தேர்வர்களிடம் இருந்து பெறப்படும் அசல் சான்றிதழ்களை உரிய ஆவணங்களுடன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில்