fbpx

மாணவர்கள் கவனத்திற்கு..! தமிழக பள்ளிகளில் இன்று முதல் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” என்ற தலைப்பில் உறுதிமொழி..!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததில் இருந்து செயல்படுத்தப்படும், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் பெரிதும் கவனம் ஏற்படுத்தி வருகின்றன.

மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்த சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி அரசு பள்ளிகளில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் இன்று முதல் ஒவ்வொரு வாரமும் பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kathir

Next Post

பருவ மழை குறைவு!… 2016 போல மீண்டும் அதிதீவிர வறட்சி ஏற்படும் என எச்சரிக்கை!

Fri Sep 1 , 2023
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை குறைவால் கடும் வறட்சி ஏற்படும் என நீர் வளம் மேம்பாடு, வினியோக மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 8ல் துவங்கியது. மாநிலத்தில் நேற்று வரை கடந்த மூன்று மாதங்களில் 48 சதவீதம் மழை குறைவு. ஜூன் முதல் ஆக.31 வரை சராசரி 1735.2 மி.மீ., மழை பெய்ய வேண்டும். இந்தாண்டு அதே கால அளவில் 909.5 மி.மீ., பதிவானது. […]

You May Like