fbpx

மாணவர்கள் கவனத்திற்கு..!! புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு எப்போது..? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

புதுச்சேரியில் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ”ஜூன் 1ஆம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் காரணமாக தற்போது புதுச்சேரியில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரைக்கால் மாஹே மற்றும் ஏனால் ஆகிய பிராந்தியங்களுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால், தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனால், ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

அணையில் விழுந்த அதிகாரியின் செல்போன்..!! 21 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றிய பரபரப்பு சம்பவம்..!! நடந்தது என்ன..?

Tue May 30 , 2023
கடந்த வாரம் சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவுப் பொருள் ஆய்வாளர் ராஜேஷ் விஸ்வாஸ், கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்ற போது தனது விலை உயர்ந்த செல்போனை அணையில் 15 அடி ஆழ நீரில் தவறவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது செல்போனை மீட்க அணையில் இருந்து சுமார் 10 அடி ஆழத்திற்கு நீரை அவர் வெளியேற்றியிருந்தார். இந்த செய்தி தேசிய அளவில் கவனம் பெற்றது. அப்போது வெளியேற்றப்பட்ட தண்ணீரால் […]

You May Like