fbpx

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இதில், 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவத் தேர்வாகவும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் ர்வாகவும் நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 27.30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இந்நிலையில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள் எனவும், பொதுத்தேர்வுவை பார்த்து ஒரு டென்ஷனும் வேண்டாம் எந்த ஒரு பயமும் வேண்டாம். பொதுத்தேர்வில் எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கும் புத்தகத்தில் இருந்து தான் வரப்போகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னம்பிக்கையும் மன உறுதியும் தான் தேவையானது. அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்து விட்டீர்கள். தேர்வு என்பது மாணவர்களை பரிசோதிக்க அல்ல. அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்குதான்.

மேலும், தேர்வை பார்த்து பயம் வேண்டாம் பாடங்களை ஆழ்ந்து புரிந்து படியுங்கள். விடைகளை முழுமையாக தெளிவா எழுதுங்கள். நிச்சயமா வெற்றி பெறுவீர்கள். உங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர் போல நானும் உங்கள் வெற்றிக்காக காத்திருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக வாழ்த்துகிறேன் ஆல் தி பெஸ்ட்” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

தமிழ்நாட்டை அச்சுறுத்தும் 4 வகை காய்ச்சல்..!! எப்படி பாதுகாத்துக் கொள்வது..? உடனே இதை பண்ணுங்க..!!

Sun Mar 12 , 2023
தமிழ்நாட்டில் தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம். மலேரியா காய்ச்சல், குளிர், தலைவலி, குமட்டல், வாந்தி உள்ளிட்டவை மலேரியா காய்ச்சலின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த சமயத்தில், காரமான உணவுகளை குறைத்து நீர்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. கொசு ஒழிப்பே, இந்த காய்ச்சல்களில் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிற்று […]

You May Like