18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, இன்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று (ஏப்ரல் 19ஆம் தேதி) தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் உங்களிடம் இல்லையென்றால் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். இதற்கான பதில் வாக்களிக்கலாம் என்பது தான். ஆம் உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பட்சத்தில், பூத் ஸ்லிப் இல்லாமல் வாக்களிக்கலாம்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்று கூறப்படுகிறது. பூத் ஸ்லிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால், ஆதார் ஆட்டை, பான் கார்ட், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம், வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு அடையாள அட்டை, .அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, .தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, .மக்கள் தொகை பதிவேடால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, .எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
மேலும் பூத் நம்பர் வாக்காளர் நம்பர் ஆகியற்றை அறிய பூத் ஸ்லிப் தேவைப்பட்டால் அதனை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் https://www.eci.gov.in/ என்று இணையதள மூலம் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.