fbpx

ரயில் பயணிகள் கவனத்திற்கு!… வெறும் ரூ.100 முதல்!… ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!…

ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில், ஒரு இரவுக்கான அறை முன்பதிவு கட்டணம் நூறு ரூபாய் முதல் 700 ரூபாய் வரை குறைந்த விலையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. இதனிடையே ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கான வசதி உள்ளது. பெரும்பாலான பயணிகள் இந்த வசதி தெரியாததால் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள ஹோட்டல் அறைகளில் பெரிய தொகைக்கு வாடகையில் தங்குகின்றனர். ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை ஓட்டல் அறைகளைப் போலவே அனைத்து வசதிகளும் கொண்டும் உங்களுக்கு கிடைக்கும். ஒரு இரவுக்கான அறை முன்பதிவு கட்டணம் நூறு ரூபாய் முதல் 700 ரூபாய் வரை ஆகும்.

ரயில் நிலையத்தில் அறையை முன் பதிவு செய்ய முதலில் ஐ ஆர் சி டி சி கணக்கு தொடங்க வேண்டும். அதன் பிறகு உள்ளே சென்று my reservation என்பதை கிளிக் செய்து டிக்கெட் முன்பதிவின் கீழ் retiring room என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அறையை முன் பதிவு செய்து கொள்ளலாம். அதில் உங்களின் தனிப்பட்ட மற்றும் பயண தகவல் அனைத்தையும் உள்ளிட வேண்டி இருக்கும். நீங்கள் பணம் செலுத்திய உடன் உங்கள் அறை முன்பதிவு செய்யப்படும். அதேசமயம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் உணவுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பயணிகளுக்காக அனைத்து விதமான வசதிகளும் ரயில்வே மூலமாக செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் ரயில் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடையாமல் தாமதமாக வந்தால் ரயில்வே தரப்பில் இருந்து பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

#Alert: கனமழை காரணமாக இதுவரை குஜராத்தில் 9 பேர் உயிரிழப்பு...!

Mon Jul 3 , 2023
குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் மின்னலுடன் கூடிய பருவமழை காரணமாக, ஒன்பது இறப்புகளை ஏற்படுத்தியது என்று மாநில நிவாரண ஆணையர் அலோக் குமார் பாண்டே உறுதிப்படுத்தினார். பதான், கெடா, அகமதாபாத், பாவ்நகர், பனஸ்கந்தா, சோட்டா உதேபூர் மற்றும் பொடாட் மாவட்டங்களில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இறப்புகள் பெரும்பாலும் மின்னல் மற்றும் கனமழையால் ஏற்பட்டவை. சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் […]

You May Like