fbpx

பரிதாப நிலையில் ஆஸ்திரேலியா கேப்டன்..!! உலகக்கோப்பையை வென்றவருக்கு இப்படி ஒரு நிலைமையா..?

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 240 ரன்கள் எடுத்தது. பின்னர், விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் ஜோடி வெற்றியை தேடிக் கொடுத்தது. இறுதியாக 43 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா 6-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

கடந்த 1975ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா 6 முறை வெற்றி கண்டுள்ளது. இதுவரை ஆலன் பார்டர் (1987), ஸ்டீவ் வாக் (1999), ரிக்கி பாண்டிங் (2003 மற்றும் 2007), மைக்கேல் கிளார்க் (2015), பேட் கம்மின்ஸ் (2023) உலகக்கோப்பையை வென்றுள்ளனர்.

இந்நிலையில், டிராபியுடன் நாடு திரும்பிய ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸை வரவேற்க ரசிகர்கள் யாரும் விமான நிலையம் வரவில்லை. கேப்டனுக்கே இந்த நிலைமையா என்று விமர்சிக்கும் அளவிற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பத்திரிகை மற்றும் மீடியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர்.

Chella

Next Post

வலையில் சிக்கும் மன்சூர் அலிகான்..!! காவல்துறை எடுத்த முடிவு..!! அடுத்து நடக்கப்போவது என்ன..?

Wed Nov 22 , 2023
கடந்த சில நாட்களுக்கு முன் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அவர் அளித்திருந்த பேட்டியில், ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது போல காட்சிகள் இருக்கும். அதேபோல, லியோ படத்தில் லோகேஷ் அழைத்தவுடன் நடிகை த்ரிஷா என்றவுடன் அதுபோல காட்சி இருக்கும் என நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை என தெரிவித்திருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. […]

You May Like