fbpx

BREAKING: 9வது முறையாக உலக கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா…! 3விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி…

உலக கோப்பை 2023ன் 2வது அரை இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி வீரர்களில் ஹென்ரிச் கிளாசன் 47 மற்றும் டேவிட் மில்லர் 101 ரன்கள் எடுத்தனர், இவர்களை தவிர மற்ற வீரர்கள் யாரும் சொல்லும்படியாக ரன்களை எடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து தென்னாபிரிக்க அணி 49.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது.

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களை விரட்டினர். ஒரு கட்டத்தில் அணியின் ஸ்கோர் 60 ரன்கள் இருந்போது வார்னர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த மார்ஷ் ரன்கள் எதுவுமின்றி ஆட்டமிழக்க, கடுமையாக போராடிய டிராவிஸ் ஹெட்டும் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆட்டம் தென்னாபிரிக்கா பக்கம் திரும்பியது. பிறகு மார்னஸ் லபுஷேன் 18 ரன்களுக்கு அட்டமிழந்தவுடன் பெரும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கினார் மேக்ஸ்வெல். அவரும் 1 ரன்னுடன் ஆட்டமிழக்க ஸ்மித் 30, இங்க்லிஸ் 28 ரன்கள் என எதிர்பார்த்த அனைத்தும் பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழக்க, இறுதியில் கம்மின்ஸ் (14) மற்றும் ஸ்டார்க்(16) பொறுமையாக ஆடி ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி, இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக மோதவுள்ளது.

Kathir

Next Post

50 கிராம் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டால் உடலில் ஏற்ப்படும் மாற்றங்கள்…!

Fri Nov 17 , 2023
பப்பாளி சுவையில் மட்டுமல்லாது ஆரோக்கியத்திலும் சிறந்த ஒன்றாகும். இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்திலும் நல்ல சுவையிலும் இருக்கும். இந்த பழத்தில் கருப்பு நிற ஜெலட்டினஸ் விதைகள் உள்ளது. இது பலவித சுகாதார நன்மைகளை நமக்கு வழங்குகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது. இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை பப்பாளிக்கு உள்ளதால் எடை குறைப்புக்கு இது நல்ல பயன் அளிப்பதாக அமைகிறது. மாரடைப்பு ஏற்படுத்தும் அபாயத்தையும் தடுக்கிறது. தினமும் 50 […]

You May Like