கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்து வருகிறன்றன. அந்த வகையில் ஆட்டோ எக்ஸ்போ 2023-ன் 2ம் நாளானா நேற்று மாருது சுஸூகி கார் நிறுவனம் Baleno Cross மாடலான Fronx –ஐ மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது., மேலும் இது முந்தைய Nexa மாடல்களை விற்பனை செய்துவரும் டீலர்களின் கீழ் விற்பனைக்கு வருவதாக மாருதி தெரிவித்துள்ளது. இருபுறமும் பிரத்யேக ஃபாக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் உள்ளன. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், புதிய ரியர் டிசைன் கொண்டிருக்கிறது.
புதிய Fronx மாடலின் அம்சங்களில் சில ஏற்கனவே பலேனோ ஹேச்பேக்மாடலில் உள்ளதைப் போலவே வழங்கப்பட்டுள்ளது. அளவீடுகளை பொருத்தவரை, 4 மீட்டருக்கும் குறைவாக அதாவது 3995mm நீளமும், 1550mm உயரமும் மற்றும் 1765mm அகலமுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறமும் பெரும்பாலான அம்சங்கள் பலேனோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. Fronx மாடலில் இந்த என்ஜின் 90 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டர்போ யூனிட் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இது 100 ஹெச்பி பவர், 147.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மேலும் இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.2 லிட்டர் K சீரிஸ் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.