fbpx

ஆட்டோ எக்ஸ்போ 2023 : மாருதி சுஸுகியின் அட்டகாசமான 5 டோர் ஜிம்னி…!

மாருதி நிறுவனம் தனது 5 டோர் ஜிம்னி-யை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. சென்னையில்  ஜிம்னியின் விலை ரூ. 8.25 லட்சத்தில் இருந்து ரூ. 12.96 லட்சம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகியுள்ள ஜிம்னி ஒரு உலகளாவிய மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசூகி ஜிம்னியை K15C டூயல்ஜெட் இஞ்சினுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எஞ்சின் 103hp ஆற்றலையும் 137nm டார்க்கையும் வழங்குகிறது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம். 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் உண்டு என தெரியவந்துள்ளது. மாருதி சுஸூகி ஜிம்னி இந்திய சந்தையில் மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்காவுடன் போட்டியிடும். இருப்பினும் தார் மற்றும் கூர்க்கா இரண்டும் 3-கதவு வடிவத்தில் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் 5-கதவுகள் கொண்ட ஜிம்னி கார் 1.5-லிட்டர் கொண்ட 4 சிலிண்டர் உடன் K15பி நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுடன் 103 bhp பவர் மற்றும் 138 Nm டார்க்கை வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் ஏற்கனவே எர்டிகா, எக்ஸ்எல்6, பிரெஸ்ஸா போன்ற கார்களில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Kokila

Next Post

அடேங்கப்பா...! மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தின் மதிப்பு இத்தனை கோடியா...!

Mon Jan 16 , 2023
உலகப்புகழ்பெற்ற 71-வது மிஸ் யுனிவர்ஸ் பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா, போர்ச்சுகல், கனடா, இந்தியா உள்ளிட்ட 84 நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்துகொண்டனர். இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான ஆர் போனி கேப்ரியல் 2022-ஆம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு நீல நிற கல் பதிக்கப்பட்ட மிஸ் யுனிவர்ஸ் கிரீடம் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. […]

You May Like