fbpx

சூப்பர் வாய்ப்பு…! 35% மானியத்துடன்‌ வாகன கடனுதவி…! எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம் இதோ…

சேலம்‌ மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கு 35% மானியத்துடன்‌ வாகன கடனுதவிகள்‌ வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசு ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள்‌ புதிதாக சுயதொழில்‌ தொடங்க முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோரின்‌ தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, நெறிப்படுத்தி, ஊக்குவிக்கும்‌ நோக்கத்துடன்‌ புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டத்தினை 2012-13 முதல்‌ மாவட்டத்‌ தொழில்‌ மையம்‌ அலுவலகம்‌ மூலமாக செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ உற்பத்தி மற்றும்‌ சேவை சார்ந்த, திட்டத்தொகை ரூ.10 இலட்சத்துக்கு மேலும்‌ ரூ.50 இலட்சத்தை மிகாமலும்‌ உள்ள தொழில்‌ திட்டங்களுக்கு மானியத்துடன்‌ கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. மானியம்‌ திட்டத்‌ தொகையில்‌ 25% பட்டியல்‌ வகுப்பு, பட்டியல்‌ பழங்குடி இனம்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகளுக்குக்‌ கூடுதல்‌ மானியமாக திட்டத்தொகையில்‌ 10% வழங்கப்படுகிறது. மானிய உச்ச வரம்பு ரூ.75 இலட்சம்‌. மேலும்‌, கடனைத்‌ திரும்பச்‌ செலுத்தும்‌ காலம்‌ முழுமைக்கும்‌ 3% வட்டி மானியமும்‌ வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனுற குறைந்த பட்சம்‌ 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டம்‌ அல்லது தொழிற்பயிற்சி சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌. வயது 24 க்கு குறையாதிருக்க வேண்டும், உச்ச வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும்‌ இடஒதுக்கீட்டு பிரிவினர்‌ மற்றும்‌ பெண்கள்‌ உள்ளிட்ட சிறப்புப்‌ பிரிவினருக்கு 45 ஆகவும்‌ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனிநபர்‌ மட்டுமின்றி தகுதி பெற்ற ஒன்றுக்கு மேற்பட்டோர்‌ இணைந்த கூட்டாண்மைப்‌ பங்குதாரர்‌ அமைப்புகளும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்‌ பெறலாம்‌. முதலீட்டாளர்‌ பங்கு பொதுப்‌ பிரிவினருக்கு திட்டத்‌ தொகையில்‌ 10% சிறப்புப்‌ பிரிவினர்‌ 5% செலுத்திடல்‌ வேண்டும்‌.

இத்திட்டத்தின்‌ கீழ்‌, சேவைப்‌ பிரிவில்‌, மண்‌ அள்ளும்‌ இயந்திரங்கள்‌, காங்கிரீட்‌ மிக்சர்‌ வாகனம்‌, ரிக்‌ போரிங்‌ வாகனம்‌, ரெஃப்ரிஜரேட்டட்‌ ட்ரக்‌, டிப்பர்‌ போன்ற நகரும்‌ அலகுகளுக்கு மட்டுமே இது வரை இசைவளிக்கப்பட்டு வந்தது.

Vignesh

Next Post

121 வயதான பெண் காலமானார்...!இவருக்கு 56 கொள்ளுப் பேரக்குழந்தைகள்...!

Fri Mar 17 , 2023
நாகாலாந்தின் 121 வயதான புபிரேய் புகா என்ற பெண்மணி கிக்வர்மா கிராமத்தில் காலமானார். மூதாட்டி தனது கொள்ளு பேத்தி அர்ஹெனோவுடன் வசித்து வந்தார். தகவல் படி, புகா எண்பதுகளின் காலக்கட்டத்தில் பார்வையற்றவராகிவிட்டார், மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது காது கேட்கும் திறனையும் இழந்தார், அவருக்கு நான்கு குழந்தைகள் – மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்களின் மூத்த மகன் மாநிலத்தில் முதல் மெட்ரிக், முதல் பட்டதாரி […]

You May Like