விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து 5 போட்டிகளில் சதமடித்து தமிழக வீரர் ஜெகதீசன் சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தொடர்ந்து 5 சதங்களை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். அருணாச்சலப்பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5-வது சதத்தை அவர் பூர்த்தி செய்துள்ளார். இந்தத் தொடரில் தொடர்ந்து 5 சதமடித்த ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ரன்கள் எடுத்து மற்றொரு வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்துள்ளார்.

இதுவரை இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சங்ககரா, இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பீட்டர்சன், இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக நான்கு சதங்களை மட்டுமே அடித்திருந்தனர். ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.