fbpx

90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ’ஆவின் டிலைட்’ பசும்பால்..!! வாங்கலாமா? அமைச்சர் சொன்ன விளக்கம்..!!

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, 90 நாட்கள் கெடாமல் இருக்கும் ‘ஆவின் டிலைட்’ பசும்பாலை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும், ஒரு லட்சம் லிட்டர் டிலைட் பசும்பாலானது UHT (அல்ட்ரா-ஹை டெம்பரேச்சர்) தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் 90 நாட்கள் கெடாமல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்களுக்கு, 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ’டிலைட் பால்’ உதவியாக இருக்கும். 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் பால் என்பதால், பாலில் கெமிகல் கலக்கப்பட்டு இருக்கும் என மக்கள் அச்சப்பட்ட தேவையில்லை. இந்த ஆவின் டிலைட் 3.5% கொழுப்பு மற்றும் 8.5% இதர சத்துக்கள் உள்ளது.

90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ’ஆவின் டிலைட்’ பசும்பால்..!! வாங்கலாமா? அமைச்சர் சொன்ன விளக்கம்..!!

அல்ட்ரா-ஹை டெம்பரேச்சர் தொழில்நுட்பத்தில் சமன்படுத்தப்படுவதால், பாலை கெட்டுப்போக வைக்கும் பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருக்கும். இதனால், பாலை கெட்டுப்போக செய்யும் கிருமிகள் உருவாகுவது தடுக்கப்படும். மேலும் பாலில் இருக்கும் கால்சியம், மெக்னிசியம் போன்ற சத்துகள் அப்படியே தான் இருக்கும். அதனால் மக்கள் ‘ஆவின் டிலைட்’பசும்பாலை எந்தவித தயக்குமின்றி வாங்கி பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 500 மி ‘ஆவின் டிலைட்’ ரூ.30க்கு வெளியிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

SBI வங்கியில் வேலை…! டிகிரி படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

Thu Nov 3 , 2022
பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். Relationship Manager பணிக்கு தேர்வு […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like