fbpx

அசைவ உணவுகளை தவிர்த்திடுங்கள்!… காரணம் என்ன?… கோடைக்கால ஆரோக்கிய டிப்ஸ் இதோ!…

கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தை உண்டாக்கும் அசைவ உணவுகளுக்கு மாற்றாக பழங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்’ நிறைந்த பானங்களை அதிகம் குடிக்கலாம்.

சில தினங்களில் கோடைக்காலம் தொடங்கவுள்ளது. இதனால், படிப்படியாக வெயில் அதிகரிக்கும். இதன் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும் நமது உடல் மற்றும் சரும ஆரோக்கியங்கள் அதிக கவனம் செலுத்துவது அவசியமான ஒன்று. இந்தநிலையில், வெப்பத்திலிருந்து நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உணவு சார்ந்த விஷயங்களில் கவனமுடன் இருப்பது மிகவும் முக்கியம். வெயில் காலங்களில் அதிகமாக வெளியில் செல்வதை தவிர்க்கவும். அவ்வப்போது தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். அதன்படி, கோடைக்காலத்தில் உடலின் வெப்பநிலையை சராசரி நிலையை விட அதிகரிக்கும் என்பதால், அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது. அசைவ உணவுகள் எடுத்துக்கொண்டால், பல்வேறு உடல்நல பாதிப்புகள், நோய்கள் போன்றவை ஏற்படும்.

நமது உடல் ஆரோக்கியத்திற்காக அசைவ உணவுகளுக்கு மாற்றாக பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை உடல் வெப்பநிலையை சீராக்க உதவும். மேலும் நீரிழிவு பிரச்னை ஏற்படுவதை தடுக்கும். எலுமிச்சை நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வெப்ப அலையைத் தடுக்க இது மிகவும் பயன்படுகிறது. மேலும், கோடையில் அதிகளவு தண்ணீர் குடிப்பதைவிட, ‘எலக்ட்ரோலைட்’ நிறைந்த பானங்களை அதிகம் குடித்தால் மிகவும் நல்லது.இவை உடலை நீரேற்றமாக வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவிபுரியும்.

மதிய வேளையில் சைவ உணவுகளுடன் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வெப்பத்தில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும். இதேபோல், கோடைக்காலங்களில் வெள்ளரி ஜூஸ், எலுமிச்சை மற்றும் புதினா சேர்க்கப்பட்ட ஜூஸ்களை பருகுவது உடலுக்கு நல்லது. இளநீரில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால், சூட்டை தணிக்க இதனை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் இளநீர் பருகுவதில் கட்டுப்பாடு வேண்டும்.

Kokila

Next Post

2023 நீட் தேர்வுக்கு இன்று முதல் மே 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...! வெளியான அறிவிப்பு...!

Mon Mar 6 , 2023
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ NTA இணையதளமான neet.nta.nic.in இல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை அரசு மருத்துவக்கல்லூரிகளில் 5,500க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் உள்ளன. 2023-24ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்தது. […]

You May Like