fbpx

“67000 ரூபாய் சம்பளம்” மத்திய அமைச்சகத்தின் ஊரக வளர்ச்சித் துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி அமைப்பான ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் (NIRD & PR), ஐதராபாத் ஆகும். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் ஆனது ஊரக வளர்ச்சியில் பயிற்சி,ஆராய்ச்சி, நடவடிக்கை ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்சி செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட்டில் தற்போது உள்ள பொது இயக்குனர் பதவிக்கான காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணி டெபுடேஷன் மற்றும் நேரடி ஆள்சேர்ப்பு முறையில் நிரப்பப்பட உள்ளது.

பணியின் விவரங்கள்: பொது இயக்குனர் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கு சுமார் 50 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். என்றும் டெபுடேஷன் பிரிவில் நியமனம் செய்வதற்கு அதிகபட்சமாக 56 வயது வரையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதற்கான சம்பளம் ரூ.37,400 முதல் 67000-ரூபாய் வரையும், மேலும் GP ரூ.10000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி: டேபுடேஷன் பிரிவில் தேர்வு செய்வதற்கு குரூப் ஏ பிரிவில் அரசின் பணியாற்றி இருக்க வேண்டும். நேரடி நியமனம் செய்வதற்கு சமூக அறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், அத்துடன் 15 வருட அனுபவம் அவசியம். மேலும் இந்த பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பதாரர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படும். விண்ணப்பதாரர்கள் அதிகரித்தால் நேர்காணல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்தப் பணியில் சேர ஆர்வமாக இருப்பவர்கள் இந்த அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலமாக இங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்துடன் சரியான ஆவணங்களையும் ஒன்றிணைத்து அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் nirdpr.org.in என்ற இணையதளத்தில் சென்று இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, “செயலாளர், ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஊரக வளர்ச்சித்துறை, கோர்-4B(UG), இந்தியா வசிப்பிட மையம் லோதி ரோடு புதுடெல்லி 110003.” ஆகும். தபால் மூலமாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 31-12-2022.

Kathir

Next Post

ஷாக் நியூஸ்...! இந்த வாகனங்களை இயக்க கூடாது...! அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்ட அரசு...!

Tue Dec 6 , 2022
தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், டெல்லி அரசு BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் நான்கு சக்கர வாகனங்களை டிசம்பர் 9 வரை நகரில் இயக்க தடை விதித்துள்ளது. ஜிஆர்ஏபி எனப்படும் திருத்தப்பட்ட தரம் மேம்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் துணைக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், புதுடில்லியின் காற்றின் தரம் மற்றும் மாசுபாட்டின் அளவு குறித்து மதிப்பாய்வு நடத்தப்பட்டது. மதிப்பாய்வில், கடந்த 24 மணி நேரத்தில், […]

You May Like