சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; பனை மர சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை ஏறும் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்குதல் போன்ற இனங்களுக்கு ரூ.1.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி எளிதாக மரத்தில் ஏறுவதற்கான கருவிகளைக் கண்டுபிடிக்கும் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு விவசாயிகனை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த பனை ஏறும் இயந்திரம் / கருவி கண்டுபிடிப்பவர்கள் ஒருவருக்கு விருது வழங்க ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிறந்த பனையேறும் இயந்திரம் கண்டு பிடிப்பாளர்கள் தோட்டக்கலைத் துறையால் தேர்வு செய்யப்படவுள்ளதால் பனை ஏறும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும் தன்னார்வளர்கள், பல்கலைக்கழகங்கள். தனியார் நிறுவனங்கள் www.tnhorticuture.gov.in என்ற இணையதளம் வாயிலாக விருது பெறுவதற்கு 15.03.2024-க்குள் விண்ணப்பிக்குமாறும், இது தொடர்பாக தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.