விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு அட்டகாசமான நியூஸை Google Flights வெளியிட்டுள்ளது. தற்போது இன்சைட்ஸ் (Insights) என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகவும் கட்டுபடியாகக் கூடிய விலையில் விமான டிக்கெட்களை புக் செய்வதற்கான சரியான நேரம் எது என்பது போன்ற பரிந்துரைகளை இந்த அம்சம் வழங்கும். இந்த பரிந்துரைகள் ஒரு குறிப்பிட்ட விமானத்தின் முந்தைய டேட்டாக்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
“ஒரு குறிப்பிட்ட வழிதடத்திற்கான முந்தைய சராசரி விலையுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலை குறைவாக உள்ளதா அல்லது அப்படியே இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய வசதி ஏற்கனவே Google Flights-இல் உள்ளது. இப்போது டிக்கெட்டை புக் செய்யலாமா அல்லது வரக்கூடிய நாட்களில் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று Google பிளாக் போஸ்டில் பதிவிட்டு வாடிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த வாரம் உங்களது தேர்வுகளை இன்னும் எளிதாக்குவதற்கு நாங்கள் அப்கிரேட் செய்யப்பட்ட Insights-ஐ அறிமுகப்படுத்துகிறோம். இனி நீங்கள் தேர்வு செய்த தேதி மற்றும் சேர வேண்டிய இடத்திற்கு, எந்த நேரத்தில் புக் செய்தால் குறைந்த விலையில் டிக்கெட்டை புக் செய்யலாம் என்பதற்கான தகவல்களை பெறுவீர்கள்” என்று கூறியுள்ளது. உங்களது பயண தேதிக்கு 2 மாதங்களுக்கு முன்பே Google Insights நீங்கள் டிக்கெட் புக் செய்வதற்கான சரியான நேரம் எது என்பதை உங்களுக்கு பரிந்துரைக்கும். Google Flights Insights இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.