fbpx

அட்டகாசம்..!! இனி இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பலாம்..!! ஃபோனை லேசாக தட்டினாலே பணம் பேமெண்ட் ஆகிவிடும்..!!

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் டெல்லியில் நடைபெற்று வரும் குளோபல் ஃபின்டெக் விழாவில் இந்திய தேசிய பேமெண்ட் கழகத்தின் (என்பிசிஐ) புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார். அதாவது, யுபிஐ சேவைகளில் பயன்படுத்தப்படும் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வைத்தார். அதில், 4 முக்கிய அறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன.

1) இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் மூலமே யுபிஐ செயலிகளை பயன்படுத்த முடியும். ஆப்ஸ், டெலிகாம் அழைப்புகள் மற்றும் IoT சாதனங்கள் மூலம் குரல் வழியாக யுபிஐ பணம் செலுத்த பயனர்களுக்கு உதவும் வசதிதான் இந்த ஹலோ.! இது விரைவில் பல பிராந்திய மொழிகளிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2) அதாவது, இனி வாய்ஸ் மூலமாகவே யுபிஐ செயலிகளை செயல்படுத்த முடியும். அதேபோல் LITE X என்று இன்னொரு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பைப் பயன்படுத்தி ஆஃப்லைனில் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். அதாவது இன்டர்நெட் இல்லாமலே இந்த தயாரிப்பை பயன்படுத்த முடியும்.

3) Near Field Communication என்ற புதிய வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் போனை பேமெண்ட் செய்ய வேண்டிய இடத்தில் லேசாக தட்டினாலே பணம் பேமெண்ட் ஆகிவிடும். இதற்காக க்யூஆர் கோடு ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை.

4) யுபிஐ வசதியில் ப்ரீ அப்ரூவ்ட் லோன் எடுக்கும் வசதியை கொண்டு வர ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, யுபிஐ செயலி மூலம் ப்ரீ அப்ரூவ்ட் லோன் எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கான கடன் வாங்கும் வசதியை யுபிஐ செயலிகளுக்கு வழங்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரிக்கும் என்கிறார்கள்.

Chella

Next Post

’விடாமல் துரத்தும் மழை’..!! ’இன்று எங்கெங்கு பெய்யும்’..? வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Thu Sep 7 , 2023
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்கள் மற்றும் திண்டுக்கல், தென்காசியில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (செப்.7) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]

You May Like