fbpx

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்..!! நல்ல நேரம் எது..?

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை விழா கோலாலகமாக கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்களில் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக முன்கூட்டியே கொண்டாடினர். இன்று ஆயுத பூஜை பெரும்பாலான இடங்களில், வீடுகளில் கொண்டாடப்பட இருக்கிறது. ஆயுத பூஜை என்பது நவராத்திரி விழாவின் 9-வது நாள் விழாவாகும். இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டு அருள் பெற பூஜைகள் செய்யப்படுகிறது.

கல்வி அறிவு பெருக புத்தகங்களை கொண்டும், தொழில்வளம் பெருக தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை சுத்தம் செய்து பூஜை செய்வதும் வழக்கம். நவராத்திரி 9 நாளும் கொண்டாடாவிட்டாலும், இன்று சரஸ்வதி பூஜை மற்றும் நாளை விஜயதசமி என இரு தினங்கள் அம்மனை வழிபாட்டாலே நவராத்திரியின் முழு பலன் கிடைக்கும். இன்று மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்வது நல்ல பலனை தரும். அவல், பொரி, தேங்காய், பூ , பழம் என பூஜை பொருட்கள் வைத்து இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். வேலைக்கான ஆயுதங்கள், இயந்திரங்கள், வாகனங்களை சுத்தம் செய்து அதற்கு சந்தனம், குங்குமமிட்டு பூஜை செய்ய வேண்டும்.

இன்று சரஸ்வதி பூஜை என்பதால் பூ, காய்கறிகள், பழங்கள் விலை வழக்கத்தை விட அதிகமாக விற்பனையாகிறது. தொடர் விடுமுறை என்பதால், வெளியூரில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் சென்னை போன்ற பெருநகர பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

புதிய அச்சுறுத்தல் ..! வெடித்து சிதறும் விக்ரம் லேண்டர்…

Mon Oct 23 , 2023
நிலவில் உள்ள சந்திரயான் 3 லேண்டர் மற்றும் ரோவர் விரைவில் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ (ISRO) அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்தது. பின்னர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் பல ஆய்வுகளையும் செய்து தகவல்களை கொடுத்தது. இதனையடுத்து நிலவின் தென் துருவத்தில் […]

You May Like