fbpx

உடலில் நோய் இன்றி வாழ்வதற்கு ஆரோக்கிய குறிப்புகள்…..!

பொதுவாக ஒருவர் உடலில் எந்தவித நோயுமின்றி வெகு காலம் வாழ்ந்து மடிந்தால் நாம் சொல்லும் ஒரே விஷயம் அவன் ஜாதகம் அப்படி, ராசி அப்படி, அவன் பிறந்த நேரம் அப்படி என்று சொல்வதுண்டு. ஆனால் இவையெல்லாம் கடந்த ஒரு விஷயம் உள்ளது. அதனை யாரும் கருத்தில் கொள்வதில்லை.

நாம் எப்போதும் உடலில் நோய் இன்றி ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமான, சுகாதாரமான உணவு முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இதனை யாரும் தற்போது கருத்தில் கொள்வதில்லை.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்கு முதலில் சூரிய உதயத்திற்கு முன்னர் எழுந்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம். இதனை நம்முடைய பெரியவர்கள் அடிக்கடி சொல்லி கேட்டிருக்கலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

உணவு முறை மட்டுமல்லாமல் ஒரு சில செயல்முறைகளும், நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அப்படி எல்லோரும் நிச்சயமாக ஒரு நாளைக்கு ஒரு வேலையாவது நிலத்தில் அமர்ந்து உணவு உண்ண பழகிக் கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு மனிதனுக்கு செரிமான பிரச்சனைகள் இருக்கிறது என்றால் அந்த மனிதன் பல இன்னல்களை சந்தித்த நேரலாம். ஆனால் அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் மற்றும் சர்க்கரை மிட்டாய் போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது, இது உடலில் செரிமானத்தை அதிகரிக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது நம்முடைய அன்றாட அனைத்து வேலைகளிலும் இருந்து விடுபட்டு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும். ஓய்வு என்றால் கைபேசிகளை நோண்டிக்கொண்டிருப்பதோ அல்லது வெறுமனே அமர்ந்து கொண்டு ஏதாவது வேலைகளை செய்து கொண்டிருப்பதோ அல்ல, ஓய்வு என்றால் முழுமையான ஓய்வு, காது, கண், மூக்கு, வாய் உள்ளிட்ட ஐம்புலன்களுக்கும் முழுமையான ஒய்வு வழங்க வேண்டும்.

மேலும் இரவு நேரத்தில் சற்று நேரம் நடை பயிற்சி பயில்வது மிகவும் நல்லது. பெரும்பாலும் பொதுமக்கள் ஒரு நாளில் தொடக்கத்தில் டீ அல்லது காபியுடன் அந்த நாளை தொடங்குவார்கள். அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் குடித்து அதன் பிறகு ஒரு நாளை தொடங்க வேண்டும். இது ஒருவரின் செரிமானத்தை அதிகரிக்கும். அதோடு மட்டுமல்லாமல் உடலை நல்ல ஆற்றலோடு வைத்திருக்கும்.

அதோடு, நாள்தோறும் அனைவரும் வாழ்த்து விளக்குவது அன்றாட நிகழ்வு தான். அதேபோல நாள்தோறும் அனைவரின் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும், இது மிக மிக அவசியம் என்று சொல்லப்படுகிறது.

அதோடு சருமத்தில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு மசாஜ் செய்வது நல்லது. இதன் காரணமாக, சருமத்திற்கு ஊட்டச்சத்து கிடைக்கும். ஆனாலும் இதனை நிபுணர்களின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

Next Post

விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்து குறித்து புகார் அளிக்க இலவச எண்...! மத்திய அரசு தகவல்

Wed Aug 2 , 2023
விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்து / போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக, தன்னாட்சி அமைப்பான தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை , இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுடன் இணைந்து இளம் விளையாட்டு வீரர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் ஊக்கமருந்து எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ஊக்கமருந்து தடுப்பு விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த தகவல்களை வழங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகள ஆதரவு […]

You May Like