fbpx

’அசிங்கமா போச்சு குமாரு’..!! ஒரு மாணவனுக்காக 30 மாணவிகள் கட்டிப் புரண்டு சண்டை..!! திருப்பூரில் பயங்கரம்..!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை அருகே புது ராமகிருஷ்ண புரத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப் பகுதியில், மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக திரண்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் மாறி மாறி தகாத வார்த்தைகளால் வசைபாடி கொண்டனர். ஒருவரை பார்த்து இன்னொருவர் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் திட்டிக் கொண்டார்கள். இந்த வார்த்தை போர், திடீரென தகராறாக மாறியது. மாணவிகள் தலை முடியைப் பிடித்துக் கொண்டு கட்டிப் புரண்டு சண்டையில் ஈடுபட்டனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அந்த சண்டையை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். எதற்காக இவர்கள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள் என்றும் புரியாமல் விழித்தனர். மோதலை தடுத்து நிறுத்த முயன்றும் ஆவேசமாக காணப்பட்ட மாணவிகளை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு, பெரும் முயற்சிக்கு பிறகு அவர்களை பொதுமக்கள் அமைதிப்படுத்தினர். பின்னர், சண்டைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரிக்கப்பட்டது.

அப்போது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், அதே பள்ளியில் பயின்று வரும் ஒரு மாணவனைக் காதலித்து வந்துள்ளார். அந்த மாணவனுக்கு மற்றொரு மாணவி வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பல்வேறு மெசேஜ்களை அனுப்பி பேசி வந்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த மாணவனின் காதலி, எப்படி நீ என் காதலனுடன் சாட்டிங் செய்யலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இந்த பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என 2 மாணவிகளும் தங்களது தோழிகளுடன் பவானி நகர் காட்டுப்பகுதிக்கு வந்துள்ளனர். அப்போதுதான் இருதரப்பு மாணவிகளுக்கும் சண்டை வெடித்துள்ளது.

மாணவிகள் கூறிய காரணத்தைக் கேட்டு காரி துப்பிய பொதுமக்கள், அங்கிருந்து அவர்களை விரட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இருதரப்பு மாணவிகளிடமும் பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Chella

Next Post

’ஆத்தி அது என்னோடதா’..? குடிபோதையில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கட்டிட தொழிலாளி..!! தேனியில் பயங்கரம்

Thu Mar 30 , 2023
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். கட்டிட தொழிலாளியான இவர், குடிபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினந்தோறும் குடித்துவிட்டு குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளார். ஆரம்பத்தில், வார இறுதி நாட்களில் மட்டும் குடித்து வந்த சரவணன், தற்போது தினந்தோறும் குடிக்க ஆரம்பித்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உடன் வேலைச் செய்பவர்கள், உறவினர்கள், வீட்டில் இருப்பவர்கள் என அனைவரிடமும் குடித்து விட்டு, பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல வேலை […]
’ஆத்தி அது என்னோடதா’..? குடிபோதையில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கட்டிட தொழிலாளி..!! தேனியில் பயங்கரம்

You May Like