2025ஆம் ஆண்டில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
யார் இந்த பாபா வங்கா..?
பாபா வங்கா பல்கேரியாவைச் சேர்ந்தவர். தனது 12 வயதில் கண்பார்வையை இழந்த இவர், அதன் பிறகு கணிப்புகளை கணிக்க ஆரம்பித்தார். அவரது கணிப்புகள் அடிக்கடி, விவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன. மேலும், அவரது பல கணிப்புகள் நிறைவேறியதாக மக்கள் கூறுகின்றனர். பாபா வங்கா 1911இல் பிறந்த நிலையில், 1996 இல் இறந்தார்.
இந்நிலையில், புத்தாண்டை வரவேற்க உலகம் தயாராகி வருகிறது. வரும் ஆண்டில் என்ன நடக்கப்போகிறது என அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இந்த சூழலில், பிரபல பெண் தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். பாபா வங்கா 2025ஆம் ஆண்டு பற்றி பல வியக்கத்தக்க கணிப்புகளைச் செய்துள்ளார். அவரை பொறுத்தவரை, 2025இல் ஐரோப்பாவில் அழிவு தொடங்கும் என்று கணித்துள்ளார்.
ஐரோப்பாவில் உள்நாட்டுப் பூசல்களும், அரசியல் உறுதியற்ற தன்மையும் மக்கள் தொகையில் கடுமையான சரிவை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகரிக்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். 2025 இல் ஒரு பெரிய பேரழிவு தொடங்கும் என்றும் அவர் கணித்துள்ளார். இயற்கை பேரழிவுகள் (பூகம்பங்கள், புயல்கள், வெள்ளம்) மனிதகுலத்திற்கு ஆபத்தானதாக நிரூபிக்கப்படலாம்.
வரவிருக்கும் ஆண்டுகளுக்கான கணிப்புகள் :
2028 : ஒரு புதிய ஆற்றல் மூலமாக உலகப் பசி தணிக்கப்படும். மேலும், மனிதர்கள் வீனஸை அடைவார்கள்.
2033 : காலநிலை மாற்றம் காரணமாக, கடல் மட்டம் உயரும். கடலோரப் பகுதிகளில் மாற்றங்களைக் கொண்டுவரும்.
2043 : ஐரோப்பா ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மாற்றத்திற்கு உட்படும். இஸ்லாம் மேலாதிக்க மதமாக மாறும்.
2046 : மருத்துவத் துறையில் ஒரு புரட்சி ஏற்படும். செயற்கை உறுப்புகள் பெரிய அளவில் தயாரிக்கப்படும்.
2100 : ஒரு செயற்கை சூரியன் பூமியின் இருண்ட பக்கத்தை ஒளிரச் செய்யும்.
Read More : அதிர்ச்சி..!! ஆண் குழந்தையை பெற்றெடுத்த அரசுப் பள்ளி மாணவி..!! 12ஆம் வகுப்பில் மலர்ந்த காதலால் விபரீதம்..?