2024ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் 2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். புது வருடத்தில் நாம் என்ன செய்யலாம்..? நமது வாழ்க்கை எப்படி இருக்கும்..? என பலரும் யோசித்து வருகின்றனர். இதற்கிடையே, 2025 யாருக்கு எப்படி அமைய போகிறது என ஜோதிட வல்லுநர்களும் ஒருபக்கம் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், தன்னுடைய யதார்த்தமான கணிப்பால் 85% கருத்துக்களை உண்மையாக்கியவர் தான் பாபா வங்கா. இவரின் கணிப்பு மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இவர் 2024ஆம் ஆண்டில் கூறிய கணிப்புகளில் ஒரு சில கணிப்புகள் பலிக்காமல் போயுள்ளது. அந்த கணிப்புகள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
* 2024இல் சுற்றுச்சூழல் இதுவரை இல்லாத அளவு நிலை மாறி வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டாக மாறக்கூடும் என கணித்திருந்தார். ஆனால், வெப்பத்தை விட மழையால் தான் அழிவுகள் ஏற்பட்டன.
* 2024இல் சக்திவாய்ந்த தேசத்தால் உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்தும் என கணித்திருந்தார். இவர் கூறியது படி பார்த்தால், ரஷ்யாவின் நடவடிக்கைகள் காரணமாக உலகம் போரின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும், இன்னும் போர் உருவாகுவதற்கான சூழல் உருவாகவில்லை.
* அதாவது, 2024இல் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், உலகளாவிய நிதி நெருக்கடிகள், வளர்ந்த நாடுகளின் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டது. ஆனால், பெரியளவு எதுவும் நடக்கவில்லை.
* இதற்கிடையே, 2025ஆம் ஆண்டிற்கான கணிப்புகளில் 2 ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மோதல் வெடிக்கும் என கணித்துள்ளார். ஆனால், இது எந்தளவு உண்மை என போக போக தெரியவரும்.
Read More : இந்த நாளில் குலதெய்வத்தை வழிபட மறந்துறாதீங்க..!! வீடுகளிலும் இதை செய்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும்..!!