2023-ம் ஆண்டில் புதிய வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி உண்டு. ஆம் வாகனங்களின் விலையை அதிகரிக்கப் போகிறது. அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் புதிய விதியின் காரணமாக இந்த விலை உயர்வு இருக்கும். உண்மையில், BS6 உமிழ்வு விதிமுறைகளின் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டி உள்ளது.
இதனால் வாகனத்தை வாங்குவோருக்கு விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய உத்தரவின் பேரில் இந்திய ஆட்டோமொபைல் துறை தற்போது தனது வாகனங்களை பிஎஸ்-6 தரநிலையின் இரண்டாம் கட்டத்திற்கு மாற்ற முயற்சிக்கிறது.
மேம்பட்ட உமிழ்வு விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய, வாகனத்தின் மாசு அளவைக் கண்காணிக்கக்கூடிய வகையில் அத்தகைய சாதனம் நிறுவப்பட வேண்டும். இதற்காக, ஆக்ஸிஜன் சென்சார் போன்ற பல முக்கிய பாகங்களை பொருத்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.