fbpx

IPL: தோனியின் காலில் விழுந்து பதிரானா வணங்கினாரா?… பரவும் பொய்யான வீடியோ!

IPL: தோனியின் காலை தொட்டு பதிரானா ஆசி பெற்றதாக வெளியான ‘வீடியோ’ பொய்யானது என நிரூபணமாகியுள்ளது.

சென்னை – குஜராத் அணிகள் மோதிய லீக் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை அணி வெற்றிபெற்றது. சென்னை அணிக்காக முதல் போட்டியில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் பதிரானா, இம்முறை அணியில் சேர்க்கப்பட்டார். இதில் 150.6 கி.மீ., வேகத்தில் பந்துவீசி மிரட்டினார். 2024 தொடரில் அதிவேகமாக பந்துவீசிய பவுலர் ஆனார். இப்போட்டியில் பந்து வீசுவதற்கு முன், தோனி அருகில் சென்ற பதிரானா, அவரது காலை தொட்டு ஆசி பெற்றார் என ஒரு வீடியோ வெளியானது. இந்த வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

உண்மையில் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. இதுகுறித்து மற்றொரு திசையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ நேற்று வெளியானது. இதில் தோனிக்கு அருகில் வரும் பதிரானா, பவுலர்கள் பந்து வீசுவதற்காக ‘மார்க்’ செய்யும் ‘பேட்ஜை’ எடுத்துச் செல்கிறார். மற்றபடி தோனி காலில் பதிரானா விழவில்லை என தெரியவந்துள்ளது.

Readmore: Election: 58,500-க்கும் அதிகமான புகார்கள்…! உடனடி நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம்…!

Kokila

Next Post

Attack: கோவையில் பரபரப்பு..! அதிமுக கூட்டணி கட்சியினர் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல்...!

Sat Mar 30 , 2024
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி சண்முகா நகர் பகுதியில், பாஜகவினர் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அதிமுக கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த நவ்ஷாத் என்ற நபர், அவர்களை வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகள் பேசி, கற்களால் தாக்கியதில், பிரபு உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் காயமடைந்தனர். எதிர்விளைவுகளை எதிர்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். […]

You May Like