fbpx

‘பத்ரி’ பட வில்லன் அதிரடி கைது!… நிலத்தகராறில் இளைஞரை கொலை செய்ததால் நடவடிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் நிலத்தகராறில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த ‘டிவி’ நடிகரை போலீசார் கைது செய்தனர்.

ஹிந்தி டிவி தொடர்களில் பிரபலமான நடிகர் புபேந்தர் சிங். இவர் நடிகர் விஜய் நடித்த பத்ரி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இவருக்கு உ.பி., யின் பிஜ்னோர் பகுதியில் பண்ணை தோட்டம் உள்ளது. இதன் அருகே குர்தீப் சிங் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், புபேந்தர் சிங் தன் தோட்டத்தை சுற்றி முள்வேலி அமைக்க விரும்பி, அதற்காக அங்கிருந்த மரங்களை வெட்ட முயன்றார். இது தொடர்பாக புபேந்தர் மற்றும் குர்தீப் சிங் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதில் ஆத்திரம்அடைந்த நடிகர் புபேந்தர், தன் உதவியாளர்களுடன் சேர்ந்து, குர்தீப் சிங் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினார்.

அப்போது, புபேந்தர் சிங் துப்பாக்கியால் சுட்டதில், குர்தீப்பின் மகன் கோவிந்த்(22), பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் குர்தீப், அவரது மற்றொரு மகன் அம்ரிக், மனைவி பீரா பாய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக நடிகர் புபேந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் ஜியான் சிங், ஜீவன் சிங், குர்ஜந்த் சிங் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.

Kokila

Next Post

மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள்!… கத்தாரில் நேரில் சந்தித்த இந்திய தூதர்!

Fri Dec 8 , 2023
உளவு பார்த்ததாக கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தாருக்கான இந்திய தூதர் சந்தித்து பேசியுள்ளார். முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் புரேனேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் […]

You May Like