fbpx

இளம் வயதில் வழுக்கை தலையா.? அப்போ இந்த காரணங்களால் இருக்கலாம்.!

கூந்தல் பராமரிப்பு என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருப்பாளரும் விரும்பக் கூடிய ஒன்று. அனைவருமே தலையில் அடர்த்தியான கருமை நிற முடியுடன் இருப்பதையே விரும்புகின்றனர். மாறிவரும் இன்றைய நவீன கால சூழலில் சிறியவர்கள் முதல் ஆண்டு பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி வழுக்கை மற்றும் முடி உதிர்வு பிரச்சனை முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

பெரும்பாலும் இன்றைய இளைஞர்கள் பலர் வழுக்கை தலை பிரச்சனையால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இவ்வாறு இளம் வயதிலேயே வழுக்கை தலை மற்றும் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்களைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

முடி உதிர்தல் பிரச்சனைக்கு மன உளைச்சல் ஆரோக்கியம் குறைவான உணவுகளை உட்கொள்ளுதல் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதற்கு முக்கியமான காரணம் மரபணு பிரச்சனைகள் ஆகும். ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா என்ற மரபணு பிரச்சனை வழுக்கைத் தலை மற்றும் முடி உதிர்வதை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆண்களுக்கு பரம்பரையாக வழுக்கை தலை ஏற்படுவதற்கு இந்த மரபணு பிரச்சனை முக்கிய காரணமாக அமைகிறது. இவை தவிர ஹார்மோன் சமநிலையின்மை வழுக்கை தலை பிரச்சனை வருவதற்கு அடுத்த முக்கிய காரணியாக இருக்கிறது. ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக முடி வளரும் ஹார்மோன்களில் ஏற்படும் குறைபாடு வழுக்கைத் தலை மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது.

வழுக்கை தலை மற்றும் முடி உதிர்தல் பிரச்சனையில் மூன்றாவது மிகப்பெரிய காரணியாக இருப்பது இரும்புச்சத்து குறைபாடு ஆகும். ஏனெனில் இரும்பு சத்து முடியின் வேர்களை வலுவாக்குகிறது. இந்த இரும்புச்சத்து குறைபாடினால் முடியின் வேர்கள் வலு இழப்பதோடு நாளடைவில் வழுக்கை விழ காரணமாக அமைகின்றன. இவை தவிர அதிகமான சர்க்கரை உணவு பொருட்களை எடுத்துக் கொள்வது மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் வழுக்கை தலை வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

Next Post

"ஏய் மடையா..." இப்படி யாராவது திட்டினால், இனி கோபம் வராது.! ஏன் தெரியுமா.!

Fri Nov 24 , 2023
நாம் கோபத்தில் சிலரை பல வார்த்தைகள் கூறித் திட்டி விடுவோம். ஆனால் அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது. பல நேரங்களில் கெட்ட வார்த்தைகளாக அல்லது தகாத வார்த்தைகளாக அர்த்தம் கொள்ளப்படும் சொற்களுக்கு உண்மையான அர்த்தங்கள் வேறு மாதிரியாக இருந்திருக்கின்றன. அப்படி பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் தான் “மடையன்”. இதனை நாம் ஒருவரை முட்டாள் என்று குறிப்பதற்கோ அல்லது அறிவு கெட்டவர்கள் என்று குறிப்பதற்கோ பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையிலேயே இந்த […]

You May Like