குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீதான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்பிறகு தமிழ்நாட்டில் நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் ஓராண்டுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீதாடை தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.