fbpx

ரூ.20 குறைவான சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்ய தடை!… மத்திய அரசு அதிரடி!

ரூ.20 க்கு குறைவான விலை கொண்ட சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்துள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிப்பில் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக் கொள்கை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை இறக்குமதி இலவசம் என்ற கொள்கை மாற்றியமைக்கப்பட்டு, ரூ.20 க்கு குறைவான விலை கொண்ட சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு லைட்டரின் சிஐஎஃப் (CIF) மதிப்பு ரூ.20 அல்லது அதற்கு மேல் இருந்தால் இறக்குமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஐஎஃப் மதிப்பு என்பது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மொத்த மதிப்பைத் தீர்மானிக்க சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வர்த்தகச் சொல்லாகும். மேலும், பாக்கெட் லைட்டர்கள், எரிவாயு எரிபொருள்,பாக்கெட் லைட்டர்கள், எரிவாயு எரிபொருள், நிரப்ப முடியாதது அல்லது நிரப்பக்கூடிய லைட்டர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2022 செப்டம்பரில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

தனியார் வங்கி ரூ.2,700 கோடி பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை தரவில்லை...! IT Raid-இல் அதிர்ச்சி தகவல்...!

Sat Jul 1 , 2023
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.500 கோடி பரிவர்த்தனைக்கான எந்த விவரங்களும் கணக்கில் காட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட ரூ.110 கோடிக்கான பரிவர்த்தனை குறித்து வங்கி நிர்வாகம் தகவல் கொடுக்கப்பட்டது வருமானவரித்துறை சோதனை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதே போல 10 ஆயிரம் வங்கி கணக்குகளில் ரூ.2,700 கோடி பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான […]

You May Like