தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது. அந்த வகையில், கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதனடிப்படையில், தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், புத்தாண்டு, அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. எனினும், பொதுமக்களுக்கு சுயக்கட்டுப்பாடு என்பது அவசியம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். முன்னதாக, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.