fbpx

கிராமசபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம்..! – அன்புமணி ராமதாஸ்

ஆகஸ்ட் 15ஆம் தேதி நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களாட்சியின் ஆணிவேர் கிராம சபைகள் தான். மக்களின் விருப்பங்களை ஆட்சியாளர்களுக்கு அழுத்தமாக தெரிவிப்பதற்கான கருவியும் இது தான். தமிழ்நாட்டை இன்று பிடித்துள்ள இரு பெருங்கேடுகள் ஆன்லைன் சூதாட்டமும், மதுக்கடைகளும் தான். ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த ஓராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மது அரக்கன் ஆண்டுக்கு இரு லட்சம் உயிர்களை பலி கொள்கிறான்.

கிராமசபை கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை, மதுவிலக்கை வலியுறுத்தி தீர்மானம்..! - அன்புமணி ராமதாஸ்

இரு சமூகக்கேடுகளையும் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தாலும், அவற்றின் தீமைகளை ஆட்சியாளர்களே ஒப்புக் கொண்டாலும் கூட, ஆன்லைன் சூதாட்டத்தையும், மதுவையும் தடை செய்வது தொடுவானத்தைப் போல நீண்டு கொண்டே தான் செல்கிறது. மக்களின் உணர்வுகளை அரசிடம் உரக்க சொல்லும் வகையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மது விலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக கிராம சபைக் கூட்டங்களில் பாமக-வினர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Chella

Next Post

ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா..? அப்ப இதை படிங்க..

Tue Aug 9 , 2022
ஆதார் அட்டை என்பது இந்தியர்களுக்கு வழங்கப்படும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணாகும். நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்குத் தேவையான மிக முக்கியமான ஆவணங்களில் ஆதார் அட்டையும் ஒன்றாகும். அட்டைதாரர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்கள் ஆதாரில் இடம்பெற்றிருக்கும்.. உங்கள் தொலைபேசி எண் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஆதார் அட்டை மேலாண்மை ஆணையமான இந்திய தனித்துவ […]
ஆதாரில் இப்படி ஒரு வசதி இருக்கா..? இனி ஈஸியா வேலை முடிஞ்சிரும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like