தமிழ்நாட்டில் இன்று முதல் பஞ்சுமிட்டாய் விற்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்புத் துறையில் உள்ள உயரதிகாரிகள் மூலம் பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், சேர்க்கப்படும் ரசாயன கழிவுகளில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனம் சேர்க்கப்பட்டிருந்தால், தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.