fbpx

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு… பெங்களூருவில் இறைச்சி விற்பனைக்கு தடை; ஓவைசி கண்டனம்..!

பெங்களூரு, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற இருப்பதால் பெங்களூரு மாநகராட்சி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் பெங்களூரில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி விநாயகர் சதுர்த்திக்காக, இறைச்சி விற்க தடை விதித்துள்ள கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், இது பணக்காரர்களுக்கான அரசு. பெங்களூரு இறைச்சி தடை என்பது தொழில், வாழ்வாதாரம் மற்றும் தனியுரிமைக்கான உரிமைக்கு எதிரானது என்று ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Baskar

Next Post

முடியை பிடித்து இழுத்து சண்டை போட்ட பள்ளி மாணவிகள்; வகுப்பறையில் நடந்த சம்பவம்... வைரல் வீடியோ..!

Tue Aug 30 , 2022
உத்தரபிரதேசம் கான்பூர் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் யூனிபார்மில் மூன்று மாணவிகள் சண்டையிடும் போது ஒருவரது முடியை ஒருவர் இழுத்து ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டனர். அவர்கள் தலைமுடியை ஒருவருக்கொருவர் பிடித்து இழுத்து ஆவேசமாக திட்டி சண்டை போட்டுக்கொண்டனர். ஆரம்பத்தில் இந்த வீடியோவை பார்த்ததும், மாணவிகள் விளையாட்டுக்காக இப்படி செய்வதாக தோன்றியது. ஆனால், நிஜமாகவே மாணவிகள் தாக்கி கொண்டது பெற்றோரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பு நேரத்திலேயே நேரத்தில் இந்த சண்டை […]

You May Like