fbpx

சிறப்பு பூஜைகளுக்கு தடை..!! உண்மைக்கு புறம்பான செய்தி..!! நாளிதழ் மீது நடவடிக்கை..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறுகிறது. அதனையொட்டி, தமிழ்நாடு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடத்துவதற்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடை விதித்துள்ளது என தினசரி நாளிதழ் ஒன்றில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் நோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திருக்கோயில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட அந்த நாளிதழ் மீது தமிழக அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

Chella

Next Post

அயோத்தி: "விண்வெளியில் ராமர் கோவில் தோற்றம்.." இந்திய செயற்கைக்கோள் வெளியிட்ட முதல் படம்.!

Sun Jan 21 , 2024
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் கீழ் இயங்கும் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் செயற்கைக்கோள்களின் மூலம் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட ராமர் கோவிலின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்தப் புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்திருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் குழந்தைப் பருவ ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா […]

You May Like